டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வரதட்சணை குறித்த வழக்கு ஒன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகிய 3 பேர் அடங்கிய அமர்வுக்கு விசாரணை வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் “பெண் வீட்டாரிடம் இருந்து சொத்தாகவோ அல்லது வேறு எந்த வடிவிலும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கினால் அதை வரதட்சணையாகக் கருத வேண்டும்.
மேலும் பெண் வீட்டார்களிடம் சொந்த வீடு கட்டுவதற்காக பணம் கேட்பதும் வரதட்சணைக்குள் கொண்டுவர வேண்டும். பெண்களிடம் பெண்களே வரதட்சணை கேட்பது மிகவும் மோசமான செயலாகும். ஆகவே நீதிமன்றங்கள் இது போன்ற வழக்குகளை விரிவான முறையில் அணுக சட்டம் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும்” என்று கூறினார்கள்.