இந்தியா 7.5 சதவீத பங்குகளை வைத்துள்ள சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் துணைத் தலைவராக உரிஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் கவர்னர் பொறுப்பை உரிஜித் படேல் என்பவர் ஏற்றுள்ளார். ஆனால் இவர் தனது சொந்த காரணங்களுக்காக பதவிக்காலம் முடியும் முன்பாகவே இந்த வங்கியின் கவர்னர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் இவர் போது இந்தியா 7.5 சதவீத பங்குகளை வைத்துள்ள சீனாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஆசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
ஏனெனில் ஏற்கனவே ஆசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் துணை தலைவராக இருந்தார் டி.ஜே பாண்டியனின் பதவிக்காலம் நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்தே ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த உரிஜித் படேல் தற்போது ஆசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.