Categories
தேசிய செய்திகள்

“அப்படிப்போடு”…. மாநில அரசு ஊழியர்களுக்கு…. செம ஹேப்பி நியூஸ்….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. ஒமிக்ரான் வைரஸ் காரணமாக இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு பல மடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாகா இன்று மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அரசு ஊழியர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அரசு அலுவலகங்களில் வரும் 31ஆம் தேதி வரை 50% ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, வரும் 31ஆம் தேதி வரை அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். இதனால் அலுவலகத்துக்குச் செல்லும் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையைத் துறைகள் அல்லது அலுவலகத் தலைவர்கள் முடிவு செய்யலாம்.

இருப்பினும் சிறப்பு நிவாரண ஆணையர் மற்றும் ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், காவல் துறை, தீயணைப்பு, சுகாதாரம் மற்றும் நகராட்சி சேவைகள், மாநில தேர்தல் ஆணையர் அலுவலகம் மற்றும் பஞ்சாயத்து தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து அத்தியாவசிய அலுவலகங்கள் மற்றும் சேவைகளுக்கு, இந்த வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட துறைகள் முழு பலத்துடன் செயல்படும். அதேசமயம் ஒடிசா அரசு பணியாளர் தேர்வு ஆணையம், பணியாளர் தேர்வு ஆணையம், துணைப் பணியாளர் தேர்வாணையம் ஆகிய அனைத்து ஆட்சேர்ப்பு நிறுவனங்களில், 75 % ஊழியர்கள் பணியாற்ற அனுமதி வழங்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |