விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் முதல் வாரத்திலிருந்து துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலக நடிகரான விஷாலின் 33 ஆவது படமான “மார்க் ஆண்டனியை” ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்த படத்தினை ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.
இவ்வாறு இருக்க மார்க் ஆண்டனி திரைப்படத்தை நடிகர் விஷால் தயாரிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படம் குறித்த மாசான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மார்க் ஆண்டனி திரைப்படம் வருகின்ற மே மாதம் முதல் வாரத்தில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.