Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு….! மீண்டும் மோதும் இந்தியா – சீனா…. லடாக்கில் உருவாகவுள்ள சூறாவளி….!!

அமைதி மற்றும் நிலைத்தன்மையை காக்கும் நோக்கிலேயே இந்தியாவுடனான தங்கள் நாட்டு எல்லையில் பாலம் கட்டும் பணியினை தொடங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனாவிலுள்ள கிழக்கு லடாக்கில் அமைந்திருக்கும் பாங்காங் ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு முனைகளை இணைக்கும் விதமாக பாலம் கட்டும் பணியினை அந்நாடு தொடங்கியுள்ளது. மேலும் இதுதொடர்பான செயற்கைக்கோள் புகைப்படத்தையும் சீனா வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சீன நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான வாங் வென்பின் இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது அமைதி மற்றும் நிலைத்தன்மையை காக்கும் நோக்கிலேயே இந்தியாவுடனான தங்கள் நாட்டு எல்லையில் பாலம் கட்டும் பணியினை சீனா தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான அரிந்தம் பாக்ஸி சீனா சட்டவிரோதமாக சுமார் 60 ஆண்டு காலங்களாக ஆக்கிரமித்த இடத்தில் தற்போது பாலம் கட்டும் பணியை தொடங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |