ரஷ்யாவிற்கு உதவி செய்தால் உலக நாடுகளிலிருந்து சீனா தனித்து விடப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை இத்தாலி தலைநகர் ரோமில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். அதில் “ஜேக் சல்லிவனிடம் ரஷ்யாவிற்கு ஆதரவு அளிக்க நினைப்பதை மாற்றிக்கொள்ளுங்கள். ரஷ்யாவை பொருளாதார தடைகளில் இருந்து மீள்வதற்கு உதவி செய்தாள் சீனா உலக நாடுகளிலிருந்து தனித்து விடப்படும். மேலும் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்துள்ளார்.