Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு: ரஷ்யாவில் இனி “ATM கார்டுகள்” வேலை செய்யாது…. அதிரடி கொடுத்த பிரபல நிறுவனங்கள்….!!

உக்ரேன் மீது அதிபயங்கர தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவில் விசா மற்றும் மாஸ்டர் கார்டு தங்களது செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக அதிரடியாக தெரிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரேன் மீது தொடர்ந்து 10 ஆவது நாளாக அதிபயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரைனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கி தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை ரஷ்யா நடத்தி வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் விசா மற்றும் மாஸ்டர் கார்ட் உக்ரைன் மீதான போரை முன்னிட்டு ரஷ்யாவில் தங்களது சேவைகளை நிறுத்தி வைப்பதாக அதிரடியாக தெரிவித்துள்ளது. இது குறித்து விசா தலைமை நிர்வாக அதிகாரி அல் கெல்லி கூறியதாவது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று கூறியுள்ளார்.

மேலும் விசா பரிவர்த்தனைகள் வரவிருக்கும் நாட்களில் ரஷ்யாவில் துண்டிக்கப்பட்டதால் அந்நாட்டில் வழங்கப்பட்ட கார்டுகள் வெளிநாட்டில் வேலை செய்யாது என்றும், வெளிநாட்டில் வழங்கப்பட்ட கார்டுகள் ரஷ்யாவிற்குள் வேலை செய்யாது என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாஸ்டர் கார்டு நிறுவனம் கூறியதாவது, ரஷ்ய வங்கிகளால் வழங்கப்படும் கார்டுகள் இனி மாஸ்டர் கார்டு நெட்வொர்க்கால் ஆதரிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |