Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு….! “ரஷ்யாவை குறிவைத்த ஹேக்கிங் குழு”…. முக்கிய தகவல்கள் கசிவு…. அதிர்ச்சியில் அதிகாரிகள்….!!

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களை அடையாளம் தெரியாத அனானமஸ் என்ற பெயர் கொண்ட ஹேக்கிங் குழு கசிய விட்டுள்ளது.

உக்ரேனின் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து 3 ஆவது நாளாக தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து ரஷ்யப் படைகளை அந்நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை தாக்கி அழித்துள்ளார்கள். இவர்களுக்கு உக்ரேன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக அடையாளம் தெரியாத அனானமஸ் என்று பெயர் கொண்ட ஹேக்கிங் குழு ஒன்று களமிறங்கியுள்ளது.

இந்தக் குழு உலகம் முழுவதுமுள்ள ஹேக்கர்களின் சமூக வலைதள அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்க இந்த குழு ரஷ்யாவுடன் தொடர்புடைய ஊடகங்கள், நிறுவனங்கள் மற்றும் ரஷ்ய அரசின் இணையதள பக்கங்கள் மீது சைபர் தாக்குதலை நடத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த அமைப்பு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களை கசிய விட்டுள்ளது.

Categories

Tech |