ராம் சினிமாஸ் தியேட்டரில் வலிமை படத்தின் இடைவெளியில் போடப்பட்ட அரபி குத்துப்பாடலுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று சட்டையை கழட்டி ஆட்டம் போடவது தொடர்புடைய வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் நடிகரான அஜித்தை வைத்து எச் வினோத் இயக்கிய வலிமை படம் கடந்த 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் மிகுந்த வரவேற்புடன் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் ராம் சினிமாஸ் தியேட்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளது. அதில் வலிமை படத்தின் இன்டர்வெல்லில் தியேட்டரில் விஜயின் அரபி குத்து பாடல் ஒளிபரப்பாகிறது.
இதனை கண்ட ரசிகர்கள் தங்களது சட்டையை கழட்டி ஆட்டம் போடுகிறார்கள். மேலும் ராம் சினிமாஸ் தியேட்டர் அஜித் ரசிகர்கள் அரபி குத்து பாடலையும் கொண்டாடி வருவதாக பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவை ட்விட்டரின் கண்ட நெட்டிசன்கள் வலிமை படத்தை அஜித் ரசிகர்கள் மட்டும் தான் பார்ப்பார்களா விஜய் ரசிகர்கள பார்க்க மாட்டார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.