வலிமை படம் குறித்து தமிழக திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித் பாலிவுட் நடிகை ஹுமாவுடன் நடித்துள்ள வலிமை படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். இதனை போனிகபூர் தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து தமிழக திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் மட்டும்தான் தமிழ் சினிமா வரலாற்றிலேயே 100 வருடத்தில் 900 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளதாக கூறியுள்ளார். இந்த படம் வெளியான எல்லா பக்கமும் சிறந்த வரவேற்பைப் பெற்று முதல் நாளிலேயே 25 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.