இன்றைய காலகட்டத்தில் சாதிப் பெயர்களை சொல்லி ஏராளமான பிரச்சனைகள் நிலவி வருகிறது. எனவே வருங்காலத்தில் மாணவர்கள் சமுதாயம் தங்கள் மத்தியில் எந்த வித சாதிய பாகுபாடு இல்லாமல் கல்வியை கற்க வேண்டும். இதற்காக பள்ளியில் படிக்கும் சமயங்களில் அவர்களுடைய மனதில் சாதி குறித்து எந்த விதமான எண்ணங்களும் இல்லாமல் இருப்பதே சிறந்தது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் சாதி அடிப்படையிலான பெயர்களை கொண்ட 56 அரசு தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளின் பெயர்களை பள்ளிக்கல்வித்துறை மாற்றியுள்ளது. பெயர் மாற்றப்பட்ட பள்ளிகளுக்கு, பள்ளி அமைந்துள்ள கிராமம் (அ) தியாகிகள், அறியப்பட்ட ஆளுமையின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை பஞ்சாப் ஆம்ஆத்மி கட்சி தனது ட்விட்டரில், ‘கல்வி முறையின் புதிய சகாப்தம் பஞ்சாப்பில் உதயமாகியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.