நடிகை தமன்னா அண்மைகாலமாகவே படங்களில் நடிக்காமல் வெப்சீரியலில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. படங்களில் நடித்து வந்த தமன்னா அண்மைக்காலங்களாக வெப் சீரியல்களில் நடித்து வருகிறார். சென்ற வருடம் ஓடிடியில் வெளியான நவம்பர் மாத ஸ்டோரியில் நடித்ததன் மூலம் இவர் மேலும் பிரபலமானார் மற்றும் நல்ல பெயர் கிடைத்தது.
மேலும் நடிகை தமன்னா இதுபோன்ற வெப்சீரியல்களில் நடிக்க முடிவெடுத்து இருக்கிறார். ஏனெனில் இவருக்கு திரைப்படங்களில் கிடைக்கும் ஊதியத்தை விட வெப் சீரியல்களில் அதிகம் கிடைக்கிறது. மேலும் திரைப்படங்களில் நடிக்கும் நேரத்தை விட வெப் சீரியல்களில் குறைவாக இருக்கிறதாம்.