Categories
சினிமா

அப்படியா!…. அந்த ஆசை நிறைவேறாமலேயே…. மரணமடைந்த பாக்யா…..!!!

பிரபல பாடகர் ஆனா பம்பா பாக்யா முதலில் மேடை கச்சேரியில் தான் பாடி வந்தார். அதன் பிறகு இவரின் வசீகரிக்கும் குரலை கண்ட ஏ.ஆர்.ரகுமான் தனது இசையில் பாட அவருக்கு வாய்ப்பளித்தார் அதன்படி ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளியான ராவணன் படத்தில் இடம்பெற்ற ‘கிடா கிடா கறிஅடுப்புல கிடக்கு’ என்ற பாடல் தான் பாக்யாவின் முதல் பாடல் ஆகும். அதனைத் தொடர்ந்து ரஜினி நடித்த எந்திரன் படத்தில் புள்ளிங்காள் பாடலை பாடினார். அதன் பிறகு ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பிகில், சர்க்கார், சர்வம் தாளமயம், இரவின் நிழல் ஆகிய படங்களில் பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் 49 வயதான பாம்பா பாக்கியா திடீர் நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு அண்ணா நகரில் உள்ள மருத்துவமனில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதய துடிப்பு குறைந்து சிறுநீரக செயல்பாடு குறைந்து வயிற்றில் அதிக நீர் சேர்ந்திருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற திட்டமிட்டனர். ஆனால் அதற்கு சிகிச்சை பலனின்றி பம்பா பாக்யா நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு இசையமைப்பாளர் சங்க தலைவர் தீனா, இசைத்துறையினர் மற்றும் திரை துறையினர் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் பம்பா பாக்யா அஜித்துக்கும் தனது குரலில் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவரது ஆசை நிறைவேறாமலேயே மரணம் அடைந்தார்.

Categories

Tech |