வட கொரிய அதிபரான கிம் ஜாங் உன் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக
விலக்க ஆரம்பித்துள்ளார்.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில விதிமுறைகளை கொண்டு வந்துள்ளார்கள்.
அதன்படி வடகொரியாவும் சில கட்டுப்பாடுகளை அந்நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதற்கிடையே வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் கொரோனா தொற்றால் எவரும் தங்கள் நாட்டிற்குள் பாதிக்கப்படவில்லை என்று கூறிவருகிறார்.
இந்நிலையில் சுமார் 2 வருடங்களுக்கு முன்பாக கொரோனாவிற்காக போடப்பட்ட கட்டுப்பாடுகளை வட கொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் மெல்லமெல்ல தளர்த்தி வருகிறார்.
அதன்படி அந்நாட்டிற்கு அருகே உள்ள சீன எல்லைகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் வட கொரியா மற்றும் சீனா நாடுகளுக்கிடையிலான சரக்கு ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.