பீட்ஸ் படத்தின் கதை அம்சம் குறித்து வெளியான தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது பீட்ஸ் என்ற படத்தில் நடித்து நடித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை நெல்சன் இயக்க பூஜா ஹெக்டே செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வருகின்றன. அதாவது இந்த படம் முழுக்க ஒரே நாளில் நடந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாம். அதாவது கைதி படத்தை போல் ஒரே நாளில் நடந்த சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய்க்கு பாடல் காட்சிகள் தவிர மற்ற அனைத்து காட்சிகளிலும் ஒரே காஸ்ட்யூம் தானாம்.
மேலும் இந்த படம் தங்க கடத்தலை மையமாகக் கொண்ட கதைக்களத்துடன் நகர்கிறது. இந்த படத்தை நெல்சன் இயக்குவதால் காமெடிக்கு எந்த பஞ்சமும் இருக்காது என்கின்றனர் படக்குழுவினர். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பீட்ஸ் படத்தின் பாடல் விரைவில் வெளியிடப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளன.