ஐ பி.எல் இன் மெகா ஏலம் இன்று துவங்குகின்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த சாருக்கான் அதிக விலைக்கு ஏலம் போவதற்கு வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இதில் மொத்தமாக 590 வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த சாருக்கான் அதிக விலைக்கு ஏலம் போவதற்கு வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அணியின் பவுலரான தீபக் சகாரும் ஸ்பின்னரான சஹாலும் அதிக விலைக்கு ஏலம் போவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஷாருக்கான் ஐ.பி.எல் ஏலத்தில் தனது பெயரை 40 லட்சம் ரூபாய் செலவில் பதிவு செய்துள்ளார்.