Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படியா….! தனுஷ், மாமியாரை குத்திக் காட்டி தான்…. வைரலாகவும் போஸ்ட்….!!!

ஐஸ்வர்யா தனது இணையதள பக்கத்தில் தனுஷை குத்தி காட்டி போஸ்ட் போட்டு உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் தற்போது இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இந்த பதிவை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார்களும், உறவினர்களும் இருவரும் மீண்டும் சேர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் இருவரும் மனம் மாறுவதாக இல்லை.

https://www.instagram.com/p/Ca184ZBp9xQ/?utm_source=ig_web_copy_link

இந்த நிலையில் ஐஸ்வர்யா உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா மகளிர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராமில் மருத்துவமனையில் தன்னை கவனித்துக் கொள்ளும் நர்ஸுகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் “என் மகன்களுக்கு தன் வாழ்வில் ஒவ்வொரு பெண்ணையும் மதிக்க கற்றுக் கொடுக்கிறேன். உங்கள் வாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அன்பு செலுத்துங்கள். வாழ்க்கை உங்கள் மீது அன்பாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

இந்த பதிவினை பார்த்தவர்கள் ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் அவரின் அம்மாவை குத்தி காட்டி தான்  போஸ்டை போட்டிருக்கிறார் என்று கருத்து தெரிவிக்கிறார்கள். மேலும் தனுஷ் தன் வாழ்வில் வந்த ஐஸ்வர்யாவை மதிக்கவில்லை என்று மறைமுகமாக கூறுகிறார் என்று தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |