சிஎஸ்கே அணி தோனியை 12 கோடிக்கு தக்க வைத்துள்ள நிலையில் இவரை விட அதிகமாக மும்பை அணி கிஷனை 15.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நேற்று ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 147 இந்திய வீரர்கள் உட்பட 217 பேர் ஏலமிடப்படவுள்ளார்கள். இந்நிலையில் நேற்று நடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி 12 கோடிக்கு தோனியை தக்கவைத்துள்ளது.
மேலும் கொல்கத்தா அணி 12.25 கோடிக்கு ஸ்ரேயஸை ஏலத்தில் வாங்கியுள்ளது. இதற்கிடையே கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்தே மும்பை அணிக்காக இஷான் கிஷன் விளையாடி வருகிறார். ஆகையினால் இறுதியாக மும்பை அணி கிஷனை தோனியை விட அதிக விலையான 15.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.