நேற்றுவரை காங்கிரசுக்கு சாதகமாக பேசிய குஷ்பு இன்று பிரதமர் மோடியின் தலைமை நாட்டிற்கு தேவை என்பதை உணர்ந்து பாஜகவில் இணைந்துள்ளேன் என அந்தர் பல்டி அடித்துள்ளார்.
நடிகை குஷ்பு பாஜாகவில் இணையவிருக்கின்றார் என்று சில நாட்களாக சலசலப்பு ஏற்பட்டதையடுத்து குஷ்புவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இதை திட்டவட்டமாக மறுத்தார்.இன்று காலை ஜே.பி நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைவதற்காக டெல்லி புறப்படுகிறார் என்று வந்த செய்தியையடுத்து காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து காங்கிரஸில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பு அறிவித்தார்.சற்று நேரத்திற்கு முன்பு பாஜக அலுவலகத்துக்கு சென்ற நடிகை குஷ்பு பாஜகவில் தன்னை அதிகாரபூர்வமாக இணைத்துக்கொண்டார்.மேலும் அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு பிரதமர் மோடி மற்றும் பாஜக மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனரெனவும்,தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க கடுமையாக உழைப்போம் எனவும் தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடி போன்ற தலைவர்களின் தலைமை நாட்டிற்கு தேவை என்பதால் பாஜகவில் இணைந்துள்ளேன் எனவும் கூறியுள்ளார். மேலும் மாற்றம் என்பது தான் மனிதர்களின் இயல்பு என்றும் கட்சிக்கு தலைவரை கூட கண்டுபிடிக்க காங்கிரசால் நாட்டை எப்படி காப்பாற்ற முடியும் என்றும் விமர்சித்துள்ளார்.நேற்றுவரை காங்கிரசுக்கு சாதகமாக பேசிய குஷ்பு இன்று பிரதமர் மோடியின் தலைமை நாட்டிற்கு தேவை என்பதை உணர்ந்து பாஜகவில் இணைந்துள்ளேன் என அந்தர் பல்டி அடித்துள்ளார்.