முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆதரவாக ஆஜராகியுள்ள வக்கீல்கள் இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு என வாதாடியுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி வரை மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படாமலிருப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 17ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தனிப்படை போலீசார் ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு மாறி செல்லும்போது மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். இதனைத் தொடர்ந்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் ராஜேந்திர பாலாஜியை 15 நாட்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ராஜேந்திரபாலாஜி சார்பாக வாதாடிய அதிமுக வக்கீல் ஆனந்த் குமார் மற்றும் மாரிஸ் குமார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அந்தப் பேட்டியில் ராஜேந்திர பாலாஜி மீது போடப்பட்டுள்ளது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட ஒரு பொய் வழக்கு என கூறியுள்ளனர். தற்போது ஆட்சி செய்து வரும் திமுக அரசால் உருவாக்கப்பட்ட இந்த பொய் வழக்கை தகர்த்தெறிவோம் என்றும் அமைச்சர் மீது புகார் கொடுத்த விஜய் நல்லதம்பி எங்கிருக்கிறார்? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்வோம் விஜய் நல்லதம்பியை பிடித்தால் உண்மை தெரியும் எனவும்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்கள் உள்ளன. அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது போலீஸ்?. என கேள்வி எழுப்பியுள்ளனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மட்டும் போலீஸ் கொடுமை செய்யவில்லை. வக்கீல்களையும் போலீஸ் கொடுமை செய்கிறது. இவ்வாறு வக்கீல்கள் கூறினர்.