நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அமமுக தலைமையில் கூட்டணி. தேர்தல் மக்களுடைய தீர்ப்புதான். ஆர்.கே நகரில் தேர்தலில் நிற்பதால் திமுக வரலாம் என சொன்னார்கள் முடிவு எப்படி இருந்துச்சுன்னு உங்களுக்கே தெரியும். எங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. இந்த தேர்தல்ல உண்மையான ஆட்சியை, மக்களின் ஆட்சியை, மக்கள் விரும்புகின்ற ஆட்சியை, ஏழை எளிய மக்களுக்கு மற்றும் தமிழ் நாட்டிலே வாழ்கின்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நல்ல ஆட்சியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கொடுக்கும்.
அம்மாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் தரும் என்கின்ற அடிப்படையில் எங்களுக்கு, எங்கள் கூட்டணிக்கு வாய்ப்பு அளிப்பார்கள் என்று நம்பிக்கையில் நாங்கள் தொடர்ந்து பண்ணிக்கிறோம். இந்திய வரலாற்றில் ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டதுன்னா… அது திமுக ஆட்சிதான். உண்மையான அம்மாவினுடைய ஆட்சியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கொடுக்கணும்னு சொல்றேன். நான் எதுக்காக இப்படி பேசுறேனா…. யாரு வேணும் ? யாரு வேண்டாம்னு பேசல… எங்களுடைய பொது எதிரி திமுக.
இப்போ ஆளுங்கட்சியாக இருக்கின்ற ஆட்சியை உருவாக்குனது நாங்க தான் என்பது உங்களுக்கு தெரியும். அந்த ஆட்சியில் உள்ளவர்கள் வேற திசைநோக்கி போயிட்டாங்க. சின்னம்மா என்னை தேர்தெடுக்கல. டிடிவி.தினகரன் யார் ? அப்படின்னு பேசுறாங்க. இதே ஆர்.கே நகரில் எங்கள் துணைப்பொதுச்செயலாளருக்கு வாக்களியுங்கள். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அம்மாவின் ஆட்சியை தருவதற்கான அரசியல் வாரிசு வந்துவிட்டார் என்கிற தொனியில் பேசுனாக. நான் மாத்தி மாத்தி பேசுற அரசியல்வாதி அல்ல. ஒரே கருத்தை தான் சொல்கின்றேன். நம்மளுடைய இலக்கு திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பது. அதற்காக நாங்க பயணம் செய்து கொண்டு இருக்கோம்.