செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், சட்டமன்ற தேர்தலில் எல்லாருக்குமே தெரியுமே அவங்க ஆதரவு எங்களுக்கு தான் என்பது. அவங்க சொல்லித்தான்… அறிக்கை கொடுத்து தான் தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை என்பது எங்களுடைய கருத்து.அவங்க அமமுக என ஏன் சொல்லவேண்டும் ? அவுங்க அண்ணா திமுக பொது செயளலார், அவங்க அண்ணா திமுக கொடி கட்டிட்டு இருக்காங்க, அவங்க எப்படி பேசுவாங்க, இது உங்களுக்கு தெரியாத விஷயம் கிடையாது.
அவங்க வந்து மறைமுகமாக சொல்வாங்க எல்லாம் ஒன்றிணையும் சொல்கிறார்கள், அவங்க அதை தானே சொல்கிறார்கள். அதுதான் அவுங்க சொல்ல முடியும், அவங்க எங்க சித்தி என்பதற்காக நான் போய் நீங்க அமமுக கொடியை பிடிச்சிட்டு வாங்க என்று சொல்ல முடியுமா ? இல்லை அவங்க எங்க கிட்ட அதிமுக கொடி கொடியை பிடிங்க என்று சொல்ல முடியுமா ?
என்னுடைய பாதை வேறாக இருக்கு அவங்க பாதை வேறாக இருக்கு ஆனால் எங்களுடைய இலக்கு ஒன்று தான் என்பது எல்லோருக்குமே தெரியுமே, இதுலபோய் புதுசா கேள்வி கேட்பது எல்லாம் தேவையில்லாத விஷயங்கள் என்று நான் நினைக்கிறேன் என தெரிவித்தார்.