இந்தியாவிற்கு தேசிய மொழி இல்லை டீச்சர். ஆன்லைன் வகுப்பில் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று சொன்ன ஆசிரியரிடம், இந்தி நமது தேசிய மொழி இல்லை, இங்கே பழமொழிகள் இருக்கின்றன என்று தன் மழலை குரலில் எடுத்துச் சொல்லும் இந்த குழந்தையின் செயலைப் பாருங்கள். பலரும் இந்த காணொளியை பகிர்ந்து அந்தக் குழந்தையைப் பாராட்டி வருகின்றனர்.
தனக்குப் பாடம் எடுத்த ஆசிரியருக்கு அந்த சிறுமி படம் எடுத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் என பல மொழிகள் உள்ளன என்பதையும் கூறியுள்ளார். அந்த சிறுமியின் பெயர் கேத்தரின். இதனைக் கேட்ட ஆசிரியர் சிறுமியை good என்று சொல்லி பாராட்டியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆன்லைன் கிளாஸ்ல, டீச்சர் “Hindi is the National Language of India” என்று சொல்ல, நிறுத்தி நிதானமா அந்த செஸன்ல தன் வாய்ப்பு வரும்வரை காத்திருந்து டீச்சர்க்கு விளக்கியிருக்கு நம்ம வாண்டு.
என்றைக்கோ நான் சொன்னதை நினைவில் வைத்து சரியான நேரத்துல அடிச்சிருக்கு நம்ம வாண்டு😂 #கேத்தி 1 pic.twitter.com/T7rD34rREA
— பரம்பொருள் (@paramporul) January 18, 2022