Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி சிரிச்சுகிட்டே வருவார்…! நாடகம் ஆடும் ஓபிஎஸ்… குண்டை தூக்கி போட்ட புகழேந்தி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி, சசிகலாவை சேர்ப்பது குறித்து காலநிலை மாதிரி அவ்வப்போது மாறும் ஒபிஸ்யினுடைய மனநிலை, திடீரென இப்ப சரியாக இருப்பார் அப்புறம்…  அடுத்த நாள் என்ன செய்கிறார் என்று புரியாது.  இப்படி சிரிச்சுக்கிட்டே வருவார், உங்களுக்கு பதில் சொல்லாம அப்படியே நகர்ந்து கொள்வார்.

நான் வெளிப்படையாகச் சொல்கிறேன், அவர் திருமதி சசிகலா பெயரை வைத்து அங்கே ஒரு நாடகம் ஆடலாம் என்று நினைத்தால் தோல்வி அவருக்கு தான் மிஞ்சும். அது இருக்கிற வரை தான் அவருக்கு மரியாதை, இதை அப்படியே கொண்டு போகலாம் என்று நினைத்தார். மாநகராட்சி தேர்தல் முடிந்ததும் இந்த கட்சி கட்சியாக இருக்காது, அது வரை தாக்குப் பிடிப்பார்கள், அவ்வளவுதான்.

நான் யாருடைய கைபிடியிலும் இல்லை, அவங்க ஒரு தலைப்பை எழுதிக் கொடுப்பார்கள், நான் வெளிப்படையாகச் சொல்கிறேன்… திரு ரவிபர்னட் வீட்டில் இருக்கிறார். அவரு தான் எழுதிக் கொடுப்பார் ஒரு தலைப்புக்கு, அது கொஞ்சம் விவரமாக இருக்கும், அவரு அறிவு வாய்ந்தவர்,  விஷயம் தெரிந்தவர்.

இப்போ அந்த அறிக்கை வாங்கி அப்படியே வெளியே விட்டு போய் விடுவார்கள். இவர்களுக்கு எந்த வித எண்ணங்களும் இல்லை. மத்திய அரசில் இருந்து ஒரு நூறு விவசாயிகளை கொன்னுட்டாங்க அப்படி என்று ஒரு செய்தியைச் சொன்னால் ஐயோ சரியான முடிவு அப்படி என்று சொல்கின்ற நிலையில் தான் இவர்கள் இருக்கிறார்கள் தவிர… அந்த வேளாண் சட்டத்தையே ஏன் வாபஸ் எடுத்தீர்கள் ? அப்படி கேட்கிற நிலையில் இவர்கள் கிடையாது என தெரிவித்தார்.

Categories

Tech |