உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ரஷ்யா தாக்குதலை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 21 ஆம் நூற்றாண்டில் இதுவரை கண்டிராத உக்கிரப் போராக மாறி வருகிறது. இதனை தொடர்ந்து ராணுவ கட்டமைப்புகளை தகர்க்க தான் நடவடிக்கை என்று சொல்லிக் கொண்ட ரஷ்யா தற்போது குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள் மற்றும் முக்கிய நகரங்களை சின்னா பின்னமாக்கி சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் வழக்கு எதிர்கொள்ளும் நிலையை தேடிக் கொண்டு உள்ளது.
இந்த நிலையில் உக்ரைனில் நடந்த போரில் 15 இலட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி போலந்து, ருமேனியா, சுலோவாகியா, ஹங்கேரி, மால்டோவா இன்னபிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யா இன்று உக்ரைனின் கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய தலைநகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள் பத்திரமாக வெளியேறு வதற்காகவும் மனிதாபிமான உதவிகள் வழங்கும் அடிப்படையிலும் இந்த போர் தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் மீதான 12வது நாள் தாக்குதலில் 4 நகரங்களில் போர் நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.