கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்படும் தளமாக கூகுள் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு Google for India என்ற கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள், சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது Digilocker அப்பில் உள்ள பயனர்களின் ஆவணங்களை ஆண்டிராய்டு மொபைலில் கூகுள் பைல்ஸ் மூலம் எளிதாக பயன்படுத்தவும், சேமிக்கவும் முடியும்.
இதில் மேலும் குடும்ப உறுப்பினர்களின் ஆவணங்களையும் சேமிக்க முடியும். இதன் மூலம் குறிப்பிட்ட நபரின் பெயரை உள்ளிடும் போது அவரின் ஆவணங்கள் காண்பிக்கப்படும். இந்நிலையில் தவறான மற்றும் மோசடி நபர்களின் கணக்குகளுக்கு பணத்தை அனுப்ப நேரிடும்போது சிறு எச்சரிக்கை ஒலி மூலம் எச்சரிக்கை வரும். இதனால் தேவையற்ற சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.