Categories
மாநில செய்திகள்

அப்படி போடு… இனிமே இன்டர்நேஷனல் லெவல் தான்… கெத்து காட்டும் பிரபல யுனிவர்சிட்டி…!!!

உலகிலேயே சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் கல்வி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் பொறியியல் பட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கு இருந்த வேலை வாய்ப்பு தற்போது இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும்.  தமிழகத்தில் மட்டும் நூற்றுக்  கணக்கில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் வெளிவரும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை இதற்கு காரணமாகும். அதே சமயத்தில் தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் பாடத்திட்டம் சர்வதேச தரத்துக்கு இணையாக உள்ளதா என்பதையும் உறுதி செய்யப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைகளை ஏற்று வேலைவாய்ப்பு கல்வியை வழங்கும் விதமாக பாடத்திட்டம் மாற்றப்படும் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சில மாதங்களுக்கு முன் அறிவித்துள்ளார். இந்நிலையில் உலக அளவில் வளரும் தொழில்நுட்பத்திற்கு பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்த பயிலரங்கு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக தமிழகத்தில் பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும்.

தொழில்துறையில் 2.1 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும் போது அதற்கேற்ப மாணவர்களை தயார் செய்து கொள்ள வேண்டும் படிக்கும்போதே வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளை மாணவர்கள் பெற வேண்டும் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களின் திறனை வளர்க்க பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது மிகவும் அவசியம் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். அமைச்சரின்  இந்த வலியுறுத்தலை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழக பாட திட்டம் நடப்பு கல்வி ஆண்டில் உலக தரத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |