Categories
டெக்னாலஜி

அப்படி போடு….!! இனி இன்ஸ்டாகிராம் ரீல்ஸை ஈஸியா டவுன்லோட் செய்யலாம்…. எப்படி தெரியுமா?…. முழு விவரம் இதோ….!!!!!

இன்ஸ்டாகிராமில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அதிக அளவில் மக்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தங்களைப் பற்றிய சில தகவல்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். தற்போது முன்னிலையில் இருப்பது  ரீல்ஸ் எனப்படும் வசதியாகும். இந்நிலையில்   டிக் டாக் எனப்படும் செயலியை அடிப்படையாக வைத்து இந்த ரீல்ஸ் எனப்படும் வசதி உருவாக்கப்பட்டது. இது 90 நொடிகள் வரை இருக்கும். இந்த வீடியோ தற்போது அதிக அளவு மக்களை சென்றடைகிறது. மேலும் பல கார்ப்பரேட் நிறுவனங்களும், வணிக நிறுவனங்களோடு செயல்படும் நிறுவனங்களும் தங்களின் புதிய ப்ராடக்டுகளை மக்களிடையே ப்ரமோட் செய்ய இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சாதாரணமாக பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்களை விட இந்த ரீல்ஸ் மூலம் அதிக பார்வையாளர்கள் கிடைப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதற்கு முன்பு வரை அவ்வாறு பகிரப்படும் புகைப்படங்களையும் ரிலீஸ்களையும் டவுன்லோட் செய்யும் வசதியானது இன்ஸ்டாகிராமில்  கிடையாது. ஆனால் தற்போது இந்த செயலியானது உங்களுக்கு பிடித்த ரீல்சை  டவுன்லோட் செய்யும் வசதியை  அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு நீங்கள் மூன்றாம் தரப்பு என்ற செயலி ஒன்றை டவுன்லோட் செய்ய வேண்டும். அதன்பின்னர் இன்ஸ்டாகிராமிற்கு சென்று நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் ரிலீஸிற்கு செல்ல வேண்டும். பின் அதில் இருக்கும் 3 புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் வீடியோவை காப்பி செய்து பிரஷர் சுருக்கு சென்று com எனற  வலைதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு காப்பி செய்து வைத்திருக்கும் வீடியோவை பேஸ்ட்  செய்து பிறகு சர்ச் என்ற பட்டனை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் நீங்கள் தேர்வு செய்ததை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆனால் பப்ளிக் அக்கவுண்டுகளால் அப்லோடு செய்யப்பட்ட ரீல்ஸ் மட்டுமே உங்களால் டவுன்லோடு செய்ய முடியும்.

Categories

Tech |