Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!… இனி இவர் doctor ராஜா…. நாளை இசைஞானிக்கு “டாக்டர் பட்டம் வழங்கும் மோடி” …. மதுரையில் 5 அடுக்கு பாதுகாப்பு…!!!

நாளை பிரதமர் மோடி தனி விமானத்தில் மதுரை வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் கடந்த 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் படித்த  மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நாளை  நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.  மேலும்  இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டத்தை பிரதமர் வழங்குகிறார்.

இதற்காக தனி விமானத்தில் நாளை மதுரை வருகிறார். இதனால் மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் 5  அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது.  மேலும் விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதை, கண்காணிப்பு கோபுரம் ஆகிய  இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று முதல் வருகின்ற 11-ஆம் தேதி வரை பார்வையாளர்கள் விமான நிலைய உள்வலாகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |