தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். கடந்த 1956-ஆம் ஆண்டு உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக கேபிள் டிவி என்ற நிறுவனத்தை தொடங்கியது. இது கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்த நிறுவனத்திற்கு DAS உரிமம் வழங்கப்பட்டது. இந்நிலையில் நிறுவனம் பொதுமக்களுக்கு இலவச தரநிலை வரையறை செட்டாப் பாக்ஸ்களை வழங்கி கடந்த 2017-ஆம் ஆண்டு டிஜிட்டல் சேவையையும், 2018-ஆம் ஆண்டு HD சேவையையும் தொடங்கியது.
இந்த நிறுவனம் 218 சேனல்களை 140 + GST என்ற கட்டணத்தில் வழங்குகிறது. மேலும் சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் VOD, OTT, IPTV ஆகிய சேவைகளை வழங்குவது குறித்தும், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அடுத்த 6 மாதங்களில் வழங்குவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இனிவரும் காலங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மேலும் சாந்தாதாரர்களை சேர்த்து ஒரு முன்னோடி வர்த்தக நிறுவனமாக செயல்பட ஆலோசனை வழங்கப்பட்டது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.