Categories
உலக செய்திகள்

அப்படி போடு….! “உக்ரைனில் களமிறங்கியுள்ள லட்சக்கணக்கான ஹேக்கர்கள்”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

உலகம் முழுவதும் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ ஹேக்கர்கள் சைபர் தாக்குதலில் உக்ரைனை வெற்றி பெற செய்வதற்கு உதவி செய்ய வருகின்றனர்.

ரஷ்யா உக்ரைன் மீது 20 வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் போரினை நிறுத்த முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்யப் படைகள் கீவ்வை  கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகிறது. இதற்கிடையில் இரு நாடுகளுக்கும் இடையே சைபர் தாக்குதல் நடந்து வருகிறது.

இந்நிலையில் செக் பாயிண்ட் ரிசர்ச் என்ற உலகளாவிய சைபர் தாக்குதல்களை கண்காணிக்கும் அமைப்பு ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த முதல் மூன்று நாட்களிலேயே அரசாங்க துறைகள் மற்றும் உக்ரைனிய ராணுவத்திற்கு எதிரான சைபர் தாக்குதல்களை 196% அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உக்ரைன் நாட்டின் டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் மந்திரி மைக்கைலோ பெடோரோ கடந்த மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்து இருந்தார். “அதில் நாங்கள் ஒரு தகவல் தொழில்நுட்ப குழுவை அமைக்க இருக்கிறோம். எங்களுக்கு டிஜிட்டல் உலகில் திறமை வாய்ந்தவர்கள் தேவை அனைவருக்கும் தனிப்பட்ட பணிகள் வழங்கப்படும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ ஹேக்கர்கள் சைபர் தாக்குதலில் உக்ரைனை வெற்றி பெற செய்வதற்கு உதவி செய்ய வருகின்றனர். இவர்களுக்கு டெலிகிராமில் குழு ஒன்று அமைத்து “ஐடி ஆர்மி ஆப் உக்ரைன்” என்ற முகப்பு மூலம் ரஷ்யா இணையதளங்களை குறி வைக்கும் வகையில் பணிகள் வடிவமைக்கப்பட்டு தன்னார்வலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் போர் தொடங்கிய முதல் நாளிலேயே ரஷ்யாவுக்கு எதிராக சைபர் தாக்குதல் பெருமளவில் அதிகரித்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா தங்கள் மீது இதுவரை மிகப்பெரிய அளவிலான சைபர் தாக்குதல் நடைபெறவில்லை என்று மறுத்துள்ளது.

Categories

Tech |