ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 நாள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஷிவம் டுபேவை சிஎஸ்கே 4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ள நிலையில் அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் ஐபிஎல் 15 அஸ்வது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த 2 தினங்களாக நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகளும், 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். அவ்வாறு ஏலத்தில் பங்கேற்ற அணிகள் வீரர்களை போட்டிபோட்டு வாங்கியுள்ளார்கள்.
இந்நிலையில் சிஎஸ்கே ஏலத்தில் இந்திய வீரரான ஷிவம் டுபேவை 4 கோடிக்கு எடுத்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆம் நாள் மெகா ஏலம் நடைபெற்ற அன்று அவருடைய மனைவிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த சம்பவம் ஷிவமிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.