Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்படும் ஆதித்யா விண்கலம்…. எப்போது தெரியுமா?… இஸ்ரோ முன்னாள் தலைவர் பேட்டி….!!!!

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இஸ்ரோ முன்னாள் தலைவர்  சிவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் இஸ்ரோவில் வருகின்ற 26-ஆம் தேதி பிஎஸ்எல்வி சி 4  என்ற 54-வது ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதில்  கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளுகளும் 8 வணிகரீதியான செயற்கைக்கோள்களும் அனுப்பப்படுகிறது. அதன் பின்னர் எஸ்எஸ்எல்வி செயற்கைக்கோள், ஆதித்யா எல்.ஒன்., ககன்யான் செயற்கைக்கோள் ஆகியவை செலுத்தப்படும். இந்நிலையில் மனிதனை நிலவுக்கு அனுப்பும் ககன்யா விண்கலத்தை செலுத்தும் முன்பு பலகட்ட சோதனை செய்யப்பட்டு ராக்கெட்கள் செலுத்தப்பட வேண்டியுள்ளது. அதேபோல் ரோபோவை விண்ணுக்கு அனுப்பும் சோதனையும் நடைபெறும். அதனை விண்கலம் செலுத்துவதற்கு முன்பு 2  முக்கிய காரணங்கள் உள்ளது. அது என்னவென்றால் ககன்யா  ராக்கெட்டில் செல்லும் மனிதர்களின் பாதுகாப்பு குறித்து கவனிக்க வேண்டும்.

அதற்கு தகுந்தாற்போல் ராக்கெட் உருவாக்கப்பட வேண்டும். இதனையடுத்து விண்ணில் அவர்கள் இருக்கும் போது அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பூமியில் இருப்பது போல் நிலையை அங்கு உருவாக்க வேண்டும். இதனையடுத்து மனிதர்கள் விண்ணில் செல்லும் போது ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனே அவர்கள் ராக்கெட் லிருந்து பிரிந்து தனியாக பூமிக்கு வந்து இறங்கும் வகையில் சோதனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. அனைத்து சோதனைகளும் நடத்திய பிறகு விண்ணுக்கு அனுப்பப்படும். அது வெற்றிகரமாக நடைபெற்ற பிறகு அது பாதுகாப்பான பயணமா என்பது உறுதி செய்யப்படும். அதன் பின்னர் ககன்யாவில் மனிதனை அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  தற்போது ககன்யா விண்கலம் செலுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த சோதனைகள் எதுவும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்.ஒன்.   விண்கலம் தயாராகி வருகிறது. மேலும் அடுத்த  ஆண்டு விண்ணில் செலுத்தப்படும்  என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |