நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் செல்வ ராகவனும் நடிக்க விருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் OTT-யில் வெளிவந்த ஜகமே தந்திரம் மற்றும் அத்ராங்கி ரே ஆகிய இரு படங்களும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் தனது கட்டாய வெற்றியை எதிர்பார்க்கும் தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா, தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் செல்வராகவனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘நானே வருவேன்’ படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் தனுஷுடன் செல்வராகவனும் இணைந்து உள்ளார். இதனை தொடர்ந்து ‘நானே வருவேன்’ படத்தின் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் தனுஷுடன் செல்வராகவனும் இப்படத்தில் நடிக்கிறார் என்றும், கட்டாய வெற்றியை நோக்கி உள்ள தனுஷிற்காக தனது அண்ணனே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார் என்றும் கருத்துகளை இணையதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.