சௌந்தர்யா தனது அப்பா தலைவர் 169 ல் சிறுத்தை சிவாவுடன் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ரஜினி அப்படத்தை இயக்க நெல்சனை தேர்வு செய்துள்ளார்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினி, குஷ்பூ மீனா, கீர்த்திசுரேஸ் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த “அண்ணாத்த” கடந்த தீபாவளிக்கு வெளியாகியுள்ளது. இதனை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இவ்வாறு இருக்க சில தினங்களுக்கு முன்பாக தலைவர் 169 ல் ரஜினி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் நடிக்கவுள்ளார் என்ற மாஸான அப்டேட் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது அப்பா “தலைவர் 169” ஐ சிறுத்தை சிவா இயக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ரஜினி தனது மகளின் கோரிக்கையை நிராகரித்து தலைவர் 169 ஐ இயக்க பல ஹிட் படங்களை கொடுத்த நெரிசனை தேர்வு செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.