Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு ” 560 கோடி மதிப்பில் புதிய திட்டம்…. என்னன்னு தெரியுமா?….. மாஸ் காட்டும் தமிழக அரசு….!!!!

தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது தமிழ்நாட்டில் உள்ள 2 மாவட்டங்களில்   குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, புதூர், விளாத்திகுளம் ஆகிய 6 பஞ்சாயத்துக்களில் உள்ள 363 ஊரக குடியிருப்பு பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செரு கண்ணூர், காடூர், கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம் ஆகிய 9 பஞ்சாயத்துக்கு உட்பட்ட 115 குடியிருப்பு பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 55 லிட்டர் விதம் 16.57 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஏற்கனவே 3.05 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். தற்போது நீடித்த நிலைப்பாடு கொண்ட குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட உள்ளது.  இத்திட்டத்தின் மொத்த மதிப்பீட்டு தொகையில்  மத்திய அரசு  256.84 கோடியும், மாநில அரசு  256.84 கோடியும், ஜல்ஜீவன்  திட்டத்தின் கீழ் சமுதாய பங்களிப்பு தொகையுடன் சேர்த்து செயல்படுத்திட்ட வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |