பிரபல நாடு மனிதனை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்க நாட்டை சேர்ந்த நாசா நிறுவனம் விண்வெளி ஆய்வில் முன்னிலையில் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. அதேபோல் வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என திட்டமிட்டுள்ளது. அதற்காக பல ஓரியன் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இல்லாமல் வெற்றிகரமாக அனுப்பியது. இந்த நிலையில் திடீரென மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை சீனாவும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சீன விண்வெளி நிறுவன இயக்குனரின் உதவியாளரான ஜி குய்மிங் கூறியதாவது. விண்வெளி ஆய்வில் எங்கள் நாட்டின் அடிச்சுவடுகள் பூமியின் சுற்றுப் பாதையில் மட்டும் இருக்காது. நிச்சயமாக நாங்கள் மேலும் பறப்போம். இந்நிலையில் எங்கள் நாட்டில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை உருவாக்கி அதற்கான முக்கிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் சரிபார்ப்பை நாங்கள் நிறைவு செய்துள்ளோம். எனவே நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த எங்கள் நாடு தயாராக உள்ளது. இந்நிலையில் சீன நாட்டை சேர்ந்தவர்கள் நிலவில் கால் பதிக்கும் கனவு விரைவில் நனவாகும் என அவர் கூறியுள்ளார்.