நடிகை சமந்தாவிடம் நெட்டிசன் கேட்ட கேள்விக்கு அவரை அசிங்கப்படுதும் விதமாக பதில் ஒன்றை அளித்துள்ளார். அது வைரலாகி வருகிறது.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார். அதேபோல் சமீபத்தில் அதிரப்பள்ளி அருவி அருகே எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு அதனுடன் ‘அருவிபோல எழுச்சியும், வீழ்ச்சியும் கொண்டது தான் வாழ்க்கை அதை ரசிக்க வேண்டும் அல்லது சகித்துக் கொள்ள வேண்டும்’ என்ற கேப்ஷனையும் போட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க சிறிது நேரத்தையும் ஒதுக்கி உள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. அதனை தனது இணையதள பக்கத்தில் சமந்தா ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் லைக்குகள் மற்றும் கமெண்ட்களை செய்து வந்தனர்.
இதனை தொடர்ந்து Ask me Anything எனும் கேள்வி-பதில் நேரத்தை நடிகை சமந்தா தனது ரசிகர்களுடன் செலவழித்தார். அதில் ஒருவர் நடிகை சமந்தாவிடம் எப்படி நீங்க இவ்வளவு தைரியமா இருக்கீங்க? என்றார். அதற்கு அவர் சற்றும் தயக்கமின்றி ‘பெரிய துன்பங்களை எதிர் கொண்டால் தைரியம் தானாக வந்து சேரும்’ என பதிலளித்தார். மேலும் பலர் நடிகை சமந்தாவிடம் நடனம், பாடல்கள், அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார்? என்ற பல சினிமா சார்ந்த கேள்விகளை எழுப்ப அதற்கு அவரும் பதிலளித்து வந்தார். இந்நிலையில் நெட்டிசன் என்னும் ஒருவர் சமந்தாவிடம் நீங்கள் இதுவரை இனப்பெருக்கம் செய்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் உங்கள் உடன் இனப்பெருக்கம் செய்து கொள்ள எனக்கு ரொம்ப ஆசையாக உள்ளது (“Have u reproduced cuz I wanna reproduce u,” ) என்று மோசமான கேள்வியை கேட்டுள்ளார். அவர் கேட்ட அந்த கேள்விகளுக்கு நடிகை சமந்தா பதிலடி கொடுப்பதற்காக ரிப்ளை தான் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் அவர் “இனப்பெருக்கம் என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்பதை கூகுளில் தேடி கற்றுக் கொள்ளுங்கள் (“How to use ‘reproduce’ in a sentence. Should have googled that first?”) என்று நெட்டிசனை நேரடியாக திட்டாமல் இப்படி ஒரு பதில் அளித்து அசிங்கப்படுத்தி உள்ளார்.