Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. மாணவர்களுக்கு கடனை வாரி வழங்கும் வங்கிகள்…. வெளியான தகவல்….!!!!!…!!!!

மதுரை மாவட்டத்தின் மக்களவை உறுப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் அறிக்கை  ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் வங்கிகளின் சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி கடன்  வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 1,550 மாணவர்கள் கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அதில் 1002 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இணையதளம் வழியாக 900 மாணவர்கள்  விண்ணப்பித்தனர்.

இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கனரா வங்கி 7.28 கோடியும், பாரத ஸ்டேட் வங்கி 2.61 கோடியும், இந்தியன் வங்கி 1.51 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 1.31 கோடியும், யூனியன் வங்கி 1.08 கோடியும், சென்ட்ரல் வங்கி 1.47 கோடியும், பரோடா வங்கி 1.03 கோடியும்  கடனாக வழங்கியுள்ளது. மேலும் 2023-ஆம் ஆண்டில் 240 கோடி ரூபாய் மாணவர்களுக்கு கல்வி கடனாக வழங்க வேண்டும்  என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |