மீண்டும் ஏழை, எளிய மாணவர்களுக்காக இலவச பேருந்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு மற்ற மாநிலங்களைப் போல மாணவர்களுக்கு இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தினம்தோறும் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்தனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் பேருந்துகளும் குறைவாகவே இயக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் செயல்பட்டு வருகிறது. இதனால் தற்போது மீண்டும் இலவச பேருந்து திட்டத்தை இயக்க அம்மாநில அரசு முடிவு செய்தது. அதேபோல் இன்று கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கொடி அசைத்து இலவச பேருந்துகளை தொடங்கி வைத்துள்ளனர்.