Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு…!! மாஸ் காட்டும் சென்னை லிட்டில் மவுண்ட்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

சென்னையில் உள்ள லிட்டில் மவுண்ட் பகுதியில் புதிதாக நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள லிட்டில் மவுண்ட் பகுதியில் பள்ளி, கல்லூரி, மெட்ரோ ரயில், பேருந்து நிலையம், சர்ச், நீதிமன்றம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதி எப்போதும் பிஸியான ஏரியாக்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே நான்கு வழி சாலை ஒன்று இருக்கிறது. அதில் ஒரு சாலை சைதாப்பேட்டை வழியாக அண்ணா சாலைக்கும், மற்றொரு சாலை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிண்டி நோக்கி இரண்டு ஆகப் பிரியும். இந்த வழியாக  தினம்தோறும் அவ்வழியாக 1.2 லட்சம் வாகனங்கள் செல்கிறது. இதனால் இந்த சாலையை  கடப்பதற்கு மிகவும் மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சிக்னல் இருந்தாலும், வாகன ஓட்டிகள் பலரும் அதை மதிப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதேபோல் தற்போது தாலுகா ஆபீஸ் சாலையில் உள்ள நடை மேம்பாலம் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை.  எனவே இந்த பாலத்தை மறு சீரமைத்து எஸ்கலேட்டர், லிப்ட் போன்ற வசதிகளை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை லிட்டில் மவுண்ட் பகுதியில் லிப்ட் வசதியுடன் கூடிய Twin Walkaway வகையில் இரு வழிப்பாதை கொண்ட புதிய நடை மேம்பாலம் கட்ட முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக 31 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது செயல்பாட்டிற்கு வந்தால் பொது மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |