உலக அழகி பட்டத்தை இந்திய பெண் பெற்றுள்ளார்.
கடந்த 1984-ஆம் ஆண்டு முதல்முறையாக திருமணம் முடிந்த பெண்களுக்கான உலக அழகி போட்டி தொடங்கப்பட்டது. இந்த போட்டி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் இன்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நடுவராக கடந்த 2001-ஆம் ஆண்டில் அழகி பட்டத்தை தட்டிச் சென்ற இந்தியாவை சேர்ந்த டாக்டர் அதிதி கோவித்ரிகர் நடுவராக இருந்தார். இதனையடுத்து இந்த போட்டியில் பல நாடுகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் இறுதிசுற்றில் இந்தியாவை சேர்ந்த சர்கம் கவுசல் என்பவர வெற்றி பெற்றார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “நான் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றேன். தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். எனது கணவர் இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார். மேலும் 21 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீடம் நமது இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இந்தியா மற்றும் உலகை நான் மிகவும் நேசிக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.