Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!!…‌ ரஞ்சிதமே பாடலைத் தொடர்ந்து புதிய சாதனை படைத்த “தீ தளபதி, Soul Of Varisu”…‌. செம குஷியில் படக்குழு….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பூ உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், ரஞ்சிதமே, தீ தளபதி, அம்மா சென்டிமென்ட் பாடல் போன்றவைகள் வாரிசு படத்திலிருந்து ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற தீ தளபதி பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தார். இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார்.

இந்த பாடல் தற்போது யூடியூபில் புதிய சாதனையை படைத்துள்ளது. அதன்படி தீ தளபதி பாடல் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த தகவலை வாரிசு படக்குழு போஸ்டர் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இதேபோன்று வாரிசு படத்தின் மூன்றாம் பாடல் ஆன அம்மா சென்டிமென்ட் பாடலும் புதிய சாதனையை படைத்துள்ளது. அதன்படி பில்போர்ட்டின் ஹாட்‌ ட்ரெண்டிங் சாங்ஸ் வழங்கும் twitter சார்ட்டில் சோல் ஆஃப் வாரிசு பாடல் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த தகவலையும் பட குழு twitter பக்கத்தில் வெளியிட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |