Categories
உலக செய்திகள்

அப்படி போடு….! “ரோமானிய மேயருக்கு பதிலடி கொடுத்த மத்திய மந்திரி”…. வைரலாகும் வீடியோ….!!!

மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ரோமானியா மேயருக்கு பதிலடி கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய மந்திரிகள் இந்த பணிகளை முடுக்கி விடுவதற்காக அண்டை நாடுகளுக்கு விரைந்துள்ளனர். இதற்கிடையில் ரோமானியாவில் இந்திய மாணவர்களுடன் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ரோமானியா மேயருக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் மேயருக்கு மந்திரி பதிலடி கொடுத்துள்ளார். இதில் ரோமானியாவின் புச்சாரெஸ்ட் தலைநகரில் மாணவர்கள் தஞ்சம் அடைந்திருக்கும் முகாம்களுக்கு சென்று அவர்களுடன் பேசியுள்ளார். அப்போது ரோமானிய மேயர் குறுக்கிட்டுஅவருடைய பேச்சை நிறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் மேயர் குறுக்கிட்டு பேசியதாவது. “மாணவர்களிடம் நான் அவர்களுக்கு உணவுப் பொருட்கள், தங்குவதற்கு இடம் என பல்வேறு உதவிகளை அவர்களுக்கு செய்தேன் என்று கூறுங்கள். மேலும் இவற்றைகளை செய்தது நான் தான் என்றும் நீங்கள் செய்யவில்லை என்பதையும் சொல்லுங்கள்” என்று சற்று கோபத்துடன் கூறினார். இதனைக் கேட்ட மந்திரி அவரிடம் ‘தள்ளி நிற்கச் சொன்னார். பின்பு என்ன பேச வேண்டும் என்று எனக்கு தெரியும் நீங்கள் கூற வேண்டாம்’ என்று கூறினார். இதனைத் தொடர்ந்து மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா மாணவர்களிடம் ரோமெனிய அரசு இந்தியர்களுக்கு செய்த உதவிகளை குறிப்பிட்டு பேசினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Categories

Tech |