வேட்டி சேலைகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஏழை, எளிய மக்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் இலவச சேலை மற்றும் வேட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் குறித்து நேற்று முதலமைச்சர் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இந்த திட்டம் மூலம் கடந்த ஆண்டு 264 கைத்தறி நெசவாளர்களும், 11 ஆயிரத்து 124 பெடல் தறி நெசவாளர்களும், 4 ஆயிரத்து 983 விசைத்தறி நெசவாளர்களும் வேலைவாய்ப்பு பெற்றனர். அதன் பின்னர் 1. 79 கோடி சேலைகளும், 1.79 கோடி வேட்டிகளும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டது.
அதேபோல் இந்த ஆண்டு 493.64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இந்த ஆண்டு சேலைகள் 15 வகை வடிவமைப்புகளிலும், வேட்டிகள் 5 வகை வடிவமைப்புகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த புதன்கிழமை முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி பொங்கல் பண்டிகைக்கு முன் பயனாளிகளுக்கு வேட்டி,சேலைகள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.