பிரிட்டனில் 17 வயதுடைய சிறுவன் அமைத்த பூனை சரணாலயம், இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியரின் தொண்டு நிறுவனத்தை விட அதிகமாக நிதி திரட்டியிருக்கிறது.
தெற்கு வேல்ஸில் இருக்கும் Port Talbot என்னும் பகுதிக்கு அருகில் இருக்கும் Ty-Nant என்ற பூனை சரணாலயம், கடந்த 2020 ஆம் வருடத்தில் மேகனின் தொண்டு நிறுவனத்தை காட்டிலும் அதிக பணத்தை திரட்டியிருக்கிறது. 11 வயதுடைய மேக்ஸ் வூசி என்ற சிறுவன் நிதியை திரட்ட வேண்டும் என்பதற்காக அவரின் குடியிருப்பின் பின்புறமுள்ள தோட்டத்தில் ஒரு கூடாரம் அமைத்து அங்கு தூங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு, நிதியை குறைக்கும் என்று சிறுவன் கருதியிருக்கிறார் ஆனால் அவருக்கு அதிக நிதி கிடைத்திருக்கிறது. அதன்படி சிறுவனின் கூடார வாழ்க்கைக்கு மட்டும், 107,000 பவுண்டுகள் கிடைத்திருக்கிறது. மேகன், அரச குடும்பத்திலிருந்து வெளியேறியதால் அவரின் தொண்டு நிறுவனம் இந்த நிதியில் பின்னடைவை சந்தித்திருக்கிறது.