மும்பையில் 500 சதுர அடி வரை பரப்புள்ள வீடுகளுக்கு சொத்து வரியை தள்ளுபடி செய்வதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மாநிலம் முழுவதும் உடனடியாக அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நகர வளர்ச்சித் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன் மூலமாக 16 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என்றும், மும்பை மாநகராட்சிக்கு 468 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சி தேர்தல் வருவதை முன்னிட்டு புத்தாண்டு பரிசாக சொத்துவரி தள்ளுபடியை முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.