Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்பட்டமான பச்சை துரோகம் இது….! சீமான் கடும் பாய்ச்சல்…! !

கைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்தால் 1311 தற்காலிக விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்து, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அதிகாரத்தை அடைந்த திமுக, தற்போது அவர்களைப் பணிநீக்கம் செய்து வயிற்றில் அடித்திருப்பது அப்பட்டமான பச்சைத் துரோகமாகும்.

ஒரே அரசின் கீழ், ஒரே வகையான பணியில் சேர்ந்து பத்தாண்டுகளாகப் பணிபுரிந்து வந்த தற்காலிக விரிவுரையாளர்களில் பாதிபேரை பணிநிரந்தரம் செய்துவிட்டு, மீதமுள்ளவர்களைப் பணி நீக்கம் செய்வதென்பது எவ்வகையில் நியாயமாகும்? போற்றுதலுக்குரிய அறப்பணியான அறிவு புகட்டும் ஆசிரியர் பணி செய்தவர்களை, கொடுங்குற்றவாளிகள் போல் நள்ளிரவில் இழுத்துச் சென்று கட்டாயப்படுத்தி கைது செய்துள்ளது கொடுங்கோன்மைச் செயலாகும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |