அப்பளம் சாப்பிட்டால் கொரோனாவை எதிர்த்து போராடலாம் எனக் கோரி மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மிட் வால் விளம்பரம்ப்படுத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பாபிடி என்ற அப்பளத்தை அறிமுகப்படுத்தி அதில் நாடாளுமன்ற விவகாரத்துறை, இணை அமைச்சர் ஆன அர்ஜூன் ராம் மிட் வால் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பாபிடி அப்பள பாக்கெட்டுகளை கையில் பிடித்துக்கொண்டு சுய சார்ப்பு இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அப்பளம்,
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்க உதவும் என்றும், இந்த அப்பளத்தை உருவாக்கி நிறுவனத்திற்கு பாராட்டுகள் எனவும் அமைச்சர் பேசி உள்ளார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் மத்திய அமைச்சரின் இந்த செயல் கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.