கார் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் ராயர்பாளையம் பகுதிகள் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாஸ் என்ற மகன் இருந்துள்ளார். தற்போது தாஸ் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரில் காங்கயத்தில் இருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கோவையில் இருந்து வந்த அரசு பேருந்து திடீரென கார் மீது மோதியது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரின் இடிபாடுகளில் சிக்கிய தாஸ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் பாலசுப்பிரமணி, சுரேஷ் உள்ளிட்ட 2 பேர் காயமடைந்தனர். இது குறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர்.